ஆசிரியர்கள் பணி மாறுதல் - கலந்தாய்வு தள்ளிவைப்பு

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுகளின் பணி மாறுதலுக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-19 10:53 GMT

சென்னை,

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த மே மாதமும், மனமொத்த மாறுதல் சமீபத்திலும் நடத்தி முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இதர துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வை எமிஸ் தளம் வழியாக இணையதளத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 9-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஜூலை 14-ம் தேதி எமிஸ் தளம் வழியாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின்பணி மாறுதலுக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் பணி மாறுதல் கோரி விண்ணப்பிக்க வரும் 14-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்