ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

Update: 2023-01-02 18:48 GMT

நாமக்கல் வட்டார வள மையத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் 3-ம் பருவ பயிற்சியானது அனைத்து பாடங்களுக்கும் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக கணக்கு பாடத்திற்கு நேற்று மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மணிவண்ணன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் மோகனசுந்தரம் பேசினார்.

இதில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு எளிமையான முறையில் எண்கள் மற்றும் எழுத்துக்களை அறிமுகம் செய்து கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணும், எழுத்தும் பயிற்சி தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்