மே 15 முதல் 26-ம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
மே 15 முதல் 26-ம் தேதி வரை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மேமாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்கடந்த 4ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
இந்த நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.