மீன் குட்டையில் தவறி விழுந்து ஆசிரியர் பலி

மீன் குட்டையில் தவறி விழுந்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-03 18:53 GMT

ஜெயங்கொண்டம்:

பள்ளி ஆசிரியர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற சந்துரு(வயது 39). இவர் முனியதிரையன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று கொம்மேடு கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு சென்று வருவதாகக் கூறிச்சென்றார்.

அங்கு அவருக்கு சொந்தமான மீன் குட்டையில் நின்றபோது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதில், அவர் தடுமாறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராஜேந்திரனின் மனைவி ரேவதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்