சாணார்பட்டியில் விஷம் குடித்து டீக்கடைக்காரர் தற்கொலை

சாணார்பட்டியில் விஷம் குடித்து டீக்கடைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-10 19:20 GMT

சாணார்பட்டியில் இருந்து ராலாபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு அருகில் காட்டுப்பகுதியில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்துகிடப்பதாகவும் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் சாணார்பட்டியை அடுத்த கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 57). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பெருமாள் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்