மதுபானம் விற்ற டீக்கடைக்காரர் கைது
வேடசந்தூர் அருகே மதுபானம் விற்ற டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே உள்ள நாககோனானூர் பகுதியில் உள்ள டீக்கடையில், மதுபானம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சாதாரண உடை அணிந்து, நாககோனானூரில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதை போல அமர்ந்திருந்தனர்.
அப்போது கடைக்கு வந்த ஒருவர் பணம் கொடுத்து மதுப்பாட்டில் வாங்கியதை போலீசார் பார்த்தனர். இதனையடுத்து கடையின் உள்ளே சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைக்குள் விற்பனைக்காக, பதுக்கி வைத்திருந்த 120 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டீக்கடைக்காரர் நாகப்பன் (வயது 51) என்பவரை கைது செய்தனர்.