மூதாட்டியை பலாத்காரம் செய்த டீக்கடைக்காரர் கைது

தட்டார்மடம் அருகே மூதாட்டியை பலாத்காரம் செய்த டீக்கடைகாரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-24 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள எள்ளுவிளை அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 64). படுக்கப்பத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று எள்ளுவிளை இசக்கியம்மன் கோவில் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை, மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விடுவதாக கூறி அவரை ஏற்றிச் சென்றுள்ளார். செல்லும் வழியில் அந்த மூதாட்டியை தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும் முருகன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்தார். சாத்தான்குளம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி விசாரணை நடத்தி அவரை தேடி வந்தார். இந்நிலையில் சாத்தான்குளம் விலக்கு பகுதியில் நேற்று பதுங்கி நின்ற முருகனை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்