நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டீ மாஸ்டர் பலி

ஜோலார்பேட்டை அருகே நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டீ மாஸ்டர் பலியானார்.

Update: 2023-10-09 17:55 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா (வயது 42), டீ மாஸ்டர். இவர் தனது மகன் ரியான் மற்றும் அவரது நண்பர் இம்ரான் ஆகிய இருவரையும் தனது மோட்டார் சைக்கிள்களில் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பக்கிரிதக்கா அருகே சென்றபோது திடிரென நாய் ஒன்று சாலையின் குறுக்கு வந்ததுள்ளது. இதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியதில் 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்பர் பாஷா மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி தபசும் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்