கார் மோதி டீ மாஸ்டர் சாவு

கார் மோதி டீ மாஸ்டர் சாவு

Update: 2023-04-25 18:45 GMT

ராமந்த்தம்

பெரம்பலூர் மாவட்டம் மேல்மாமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்