தூக்குப்போட்டு டீ மாஸ்டர் தற்கொலை
உளுந்தூர்பேட்டையில் தூக்குப்போட்டு டீ மாஸ்டர் தற்கொலை செய்துகொண்டாா்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 65). இவர், எம்.எஸ்.தக்கா பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற குப்புசாமி, டீ கடை ஜன்னலின் பின்புறத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.