கார் மோதி டெய்லர் பலி

கள்ளிக்குடி அருகே கார் மோதி டெய்லர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-12 19:52 GMT

திருமங்கலம்,

கள்ளிக்குடி அடுத்துள்ள உன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). டெய்லர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர் விருதுநகர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நண்பர் சுந்திரகுமாருடன் ஊருக்கு திரும்பினார். வரும் வழியில் கள்ளிக்குடி அருகே உள்ள ஆவல்சூரன்பட்டி விலக்கில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி சென்ற கார் செல்வராஜ் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயமடைந்தனர். முதல் உதவி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சையில் இருந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்திரகுமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்