வரி பாக்கியை மார்ச் 15-ந்் தேதிக்குள் செலுத்து வேண்டும்

ஜோலார்பேட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை மார்ச் 15-ந்் தேதிக்குள் செலுத்து வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-23 18:57 GMT

ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் கோ.பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி என மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் இந்நகராட்சிக்கு வரி செலுத்தாமல் நிலுவையாக உள்ளது. வருகிற மார்ச் 15-ந்் தேதிக்குள் நிலுவைதாரர்கள் வரி இனங்களை சிரமமின்றி செலுத்துவதற்கு ஏதுவாக வருகிற மார்ச் மாதம் 31-ந்் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட காலை 9 மணி முதல் மாலை 5 வரை நகராட்சியில் கணினி வசூல் மையம் செயல்படும். மேலும் நிலுவைதாரர்கள் h://turbarepay.g மூலமாகவும் வரி செலுத்தவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வரி நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்கள் உடனடியாக வரி நிறுவையின்றி செலுத்தி ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்