பா.ம.க.வினர் போராட்டம்:டாஸ்மாக் கடைகள் மூடல்

பா.ம.க.வினர் போராட்டம் நடத்திய நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடல் மூடப்பட்டது.

Update: 2023-07-28 18:45 GMT


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிக்காக நெற்பயிர்களை அழித்து நிலத்தை கையகப்படுத்தியதை கண்டித்து நேற்று நெய்வேலியில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாசை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ம.க.வினர் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 89 அரசு டாஸ்மாக் கடைகளையும் நேற்று மாலை 5 மணிக்கு மூட வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கே மூடப்பட்டது. வழக்கமாக இரவு 10 மணிக்கு மூடப்படும் டாஸ்மாக் கடைகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நேற்று மாலை 5 மணிக்கு மூடப்பட்டது மதுப்பிரியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திடல் உள்ள 108 டாஸ்மாக் கடைகள் இரவு 7 மணியுடன் மூடப்பட்டது. மேலும், இரு மாவட்டங்களிலும் நகர்புறங்களுக்கும் மற்றும் கிராமப்புறங்களுக்கும் செல்லக்கூடிய அரசு பஸ்களின் போக்குவரத்து நேற்று இரவு 8.30 மணியோடு நிறுத்தப்பட்டதுடன், இரவு 8.30 மணிக்கு மேல் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டது. போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்