சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக், சில்லரை விற்பனை கடைகள், மதுபான உரிமம் பெற்ற கூடங்கள் ஆகியவை வருகிற 15-ந் தேதியான சுதந்திர தினத்தன்று தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை மீறி அன்றைய தினம் செயல்படும் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.