டாஸ்மாக் கடைகள் விடுமுறையையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோர்

டாஸ்மாக் கடைகள் விடுமுறையையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது.

Update: 2023-02-05 19:00 GMT

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு, மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மாவட்டங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது. நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர். அந்தந்த மாவட்ட போலீசாரும் சட்ட விரோத மது விற்பனைக்கு பெயரளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு தெரிவித்தனர். மேலும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி இறைச்சி கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இறைச்சி கடைகள் அனைத்து மூடப்பட்டு காட்சியளித்தாலும், சில கடைகளில் பொதுமக்களுக்கு மறைமுகமாக இறைச்சி விற்பனை நடைபெற்றதை காணமுடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்