டாஸ்மாக் கடை ேமற்பார்வையாளர் பலி

ேமாட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் பலியானார்.

Update: 2023-01-12 18:06 GMT

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா மஞ்சகுடி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர், ஆவுடையார்கோவில் அருகே உள்ள புண்ணியவயல் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டிருந்தார்.

செம்மணாம் பொட்டல் அருகே ஆவுடையார்கோவில்-கோட்டைப்பட்டினம் சாலையில் வந்த போது, மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

மேற்பார்வையாளர் பலி

இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பழனிசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்