சுகாதாரமின்றி செயல்பட்ட டாஸ்மாக் கடைக்கு 'சீல்'

சுகாதாரமின்றி செயல்பட்ட டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2023-03-29 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி கடைவீதி பகுதியில் பழைய உழவர் சந்தைக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்தநிலையில் நேற்று குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் அந்த கடையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடந்ததுடன், சுகாதாரமற்ற முறையில் டாஸ்மாக் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட மெழுகு பூசப்பட்ட டம்ளர்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்க ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் கடையை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மெழுகு பூசப்பட்ட டம்ளர்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ. அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்