சுவரில் துளைப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
ஓசூர் அருகே சுவரில் துளைப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.
ஓசூர்
ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஊழியர்கள் விற்பனை முடிந்த பின்னர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். இதனிடையே நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது மர்ம நபர்கள் சுவரில் துளைப்போட்டு பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பணப்பெட்டியில் பணம் ஏதும் இ்ல்லாததால் மர்ம நபர்கள் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து, விற்பனையாளர் சுப்பிரமணி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.