டாஸ்மாக் ஊழியர் மர்ம சாவு
சிவகாசியில் டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
சிவகாசி,
திருத்தங்கல் பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகக்கனி (வயது 48). இவர் மாரனேரியில் உள்ள டாஸ்மாக்கடையில் உதவி விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் மயங்கி விழுந்த முருகக்கனியை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.