டாஸ்மாக் பாரில் தொழிலாளி மீது தாக்குதல்: மேலும் ஒரு வாலிபர் கைது

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் பாரில் தொழிலாளியை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-09 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள கீழ பாண்டவர் மங்கலம் தெற்கு காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சக்திவேல் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5-ந் தேதி இரவு பசுவந்தனை ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் இவருடன் தகராறு செய்து பாட்டிலால் தலையில் தாக்கினர். இதை தடுக்க வந்தவர்களை அரிவாளை காட்டி மிரட்டி விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் விசாரணை நடத்தி மறவன் மடம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர் பாண்டியன் (வயது 22) என்பவரை கைது செய்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக மந்தித்தோப்பு போஸ் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் சந்திரபோஸ் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்