ரத்தினபுரியில் டாஸ்மாக் பார் காசாளரை மிரட்டி பணம் பறிப்பு-3 பேர் கைது

ரத்தினபுரியில் டாஸ்மாக் பார் காசாளரை மிரட்டி பணம் பறிப்பு- 3 பேர் கைது

Update: 2023-02-26 18:45 GMT

ரத்தினபுரி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம்பலம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் கோவை ரத்தினபுரியில் உள்ள டாஸ்மாக் பாரில் காசாளராக (கேஷியர்) பணிபுரிகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 4 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் பாருக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த பிரகாசிடம் குடிப்பதற்கு மதுபாட்டில் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவர் டாஸ்மாக் கடை இன்னும் திறக்கவில்லை. எனவே டாஸ்மாக் கடை திறந்த பின்னர் வரும்படி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி பிரகாசை மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.200-ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதனால் பிரகாஷ் இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் பார் காசாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய கோவை கண்ணப்பநகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்