டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு

டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு

Update: 2023-02-21 18:45 GMT

ரத்தினபுரி, பிப்.22-

கோவையில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி கத்தி முனையில் பணம் பறித்த 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்

டாஸ்மாக் பார் ஊழியர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் கோவை காந்திபுரம் 7-வது தெருவில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக பணி புரிகிறார். நேற்றுமுன்தினம் இவர் காலை பாரில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தரும்படி கேட்டனர்.

அதற்கு ராஜ்குமார், டாஸ்மாக் கடை இன்னும் திறக்கவில்லை. பகல் 12 மணிக்கு பிறகு வந்து வாங்கி கொள்ளும்படி தெரிவித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கியதுடன், அவரிடம் இருந்த ரூ.30- ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

கைது

இது குறித்து ராஜ்குமார் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த தொழிலாளி மோசஸ் (28), ரத்தினபுரி வ.உ.சி தெருவை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் ரத்தின்புரி பட்டேல் தெருவை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான 3 பேரின் மீதும் கோவை காட்டூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர்கள் அந்த பகுதியில் ரவடிகளாக வலம் வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்