தாசில்தார் அதிரடி இடமாற்றம்

மண் எடுக்க பணம் பெற்றதாக தாசில்தார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2022-06-03 18:21 GMT

காரிமங்கலம்:மண் எடுக்க பணம் பெற்றதாக தாசில்தார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் வினோதா என்பவர் தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் மண் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே பணம் பெற்றுக்கொண்டு ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாசில்தார் வினோதா காரிமங்கலத்தில் இருந்து முத்திரைத்தாள் பிரிவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே பென்னாகரம் தாசில்தார் சுகுமார், காரிமங்கலம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்