குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
குற்றாலத்தில் ஏராளமானவர்கள் நேற்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குற்றாலம்:
தை அமாவாசையொட்டி குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே ஏராளமானவர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதல் புரோகிதர்கள் அருவிக்கரையில் காத்திருந்தனர். அருவியில் புனித நீராடிவிட்டு, அவர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு புரோகிதர்கள் கொடுத்த எள்ளை தண்ணீரில் கரைத்துச் சென்றனர்.