தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை

தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

Update: 2023-01-26 12:37 GMT

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வருகிற 31-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை ஜி20 மாநாடு நடக்கிறது. சென்னையில் தாஜ் கோரமண்டல், கன்னிமாரா உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளிலும், தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்திலும் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

இதையடுத்து தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்தில் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர். அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டால் உள்ளே சிக்கியவர்களை எப்படி மீட்பது? தீயை எவ்வாறு அணைப்பது? என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது.

சுமார் 170 அடி உயரம் உள்ள 'ஸ்கை லிப்ட்' மூலமாக உயரமான கட்டிடங்களில் தீ விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பது போன்று தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

சென்னை தெற்கு மண்டல தீயணைப்பு துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோ தலைமையில் கிண்டி, திருவான்மியூர், அசோக் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்