தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நாடகம் நடந்தது. இந்த நாடகத்தை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் லட்சுமி சுப்பிரமணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மரத்தூணில் ஏறிய வேடம் அணிந்த நபர் சூரியனை பார்த்து வணங்கி பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார். அப்போது வயதான மூதாட்டிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அர்ஜுனனிடம் ஆசி பெற்றனர்.