தொட்டிபாளையம் பகுதிபயனீட்டாளர்கள் அக்டோபர் மாதமின்கட்டணத்தையே செலுத்தலாம்
பயனீட்டாளர்கள்
கோபி மின் பகிர்மான வட்டம் கூகலூர் பிரிவு மின்சார அலுவலகத்துக்கு உள்பட்டது தொட்டிபாளையம் பகிர்மானம். இங்குள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களுக்காக 12-வது மாத மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே தொட்டிபாளையம் பகிர்மானத்தைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் பயனீட்டாளர்கள் 10-வது மாத மின் கட்டணத்தையே இந்த மாதமும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு கூகலூர் பிரிவு மின்சார அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
இந்த தகவலை கோபி கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.