சுரண்டையில் சிறப்பு தாமிரபரணி குடிநீர் திட்டம்

சுரண்டையில் சிறப்பு தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கூறினார்.

Update: 2022-09-30 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுரண்டை நகராட்சிக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். இதனால் சுரண்டை நகராட்சி பகுதியில் பல நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற சுரண்டை - பாவூர்சத்திரம் ரோடு, சுரண்டை- சாம்பவர் வடகரை ரோடு, சுரண்டை- சேர்ந்தமரம் ரோடு, சுரண்டை- வீரகேரளம்புதூர் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் வட்டசாலை ஏற்படுத்த வேண்டும். மேலும் சுரண்டை வழியாக நெல்லை செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் வகையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சுரண்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ.14 ேகாடியே 20 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டம் தொடங்கி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் வரை மொத்தம் 36 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் சுரண்டை நகராட்சிக்கு என பிரத்யேகமாக சிறப்பு தாமிரபரணி குடிநீர் திட்டம் செயல்படுத்த முதல்-அமைச்சருக்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 39 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு 54.6 லட்சம் லிட்டர் குடிநீர் வசதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்