தமிழ்புலிகள் கட்சியினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-07 22:22 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது திடீரென சாமியாரின் உருவப்படத்தை எரித்ததால் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி செயலாளர் மாரிசாமி தலைமை தாங்கினர். வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், குருசாமி, தி.மு.க.வை சேர்ந்த முத்துக்குமார், ராமகிருஷ்ணன், காங்கிரசை சேர்ந்த அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்