தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் தமிழரசி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை அதிகரித்து வருவதாகவும், கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.