பள்ளிபாளையம்
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டு பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக கோரியும், ஒன்றிய பா.ஜ.க. அரசு பொது சிவில் சட்டத்தை கைவிட கோரியும், தமிழ் புலிகள் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் பள்ளிபாளையம் அடுத்துள்ள காவிரி ரெயில் நிலையம் அருகே போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் சேகுவாரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் செந்தமிழன் மற்றும் நிர்வாகிகள் அறிவு தமிழன், சிவா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இந்த போராட்டத்தில் கவின், சரவணன், செல்வகுமார் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றிய, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவர்மன், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.