தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-19 19:45 GMT

தமிழ் புலிகள் கட்சி சார்பில், திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் அறிவரசு தலைமை தாங்கினார். துணை செயலாளர் முருகன், பொருளாளர் அழகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அமல்படுத்த முயற்சிக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட இளம்புலி அணி செயலாளர் சங்கத்தமிழன், ஒன்றிய செயலாளர் நல்லமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்