தமிழ் புலிகள் கட்சியினர் சாலை மறியல்; 11 பேர் கைது

கடையநல்லூரில் தமிழ் புலிகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். இதுதொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-06 11:34 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாவட்ட மாநாட்டுக்கான சுவர் விளம்பரங்களை நகரில் பல்வேறு இடங்களில் செய்திருந்தனர். ஆனால் அனுமதி இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பாங் கால்வாய் பாலத்தில் உள்ள அரசு சுவற்றில் விளம்பரம் எழுதியதை நேற்று இரவு போலீசார் அழித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழ் புலிகள் வடக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நேற்று காலை மதுரை -தென்காசி தேசிய நெடுஞ்சாலை கடையநல்லூர் சார் பதிவு அலுவலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் 15 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் தலைமையில் போலீசார் போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட தமிழ் புலி கட்சியைச் சார்ந்த 11 பேரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்