தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம்
கூத்தாநல்லூர் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் கிராம சங்க பேரவை கூட்டம் தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மகேந்திரன் சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் டாக்டரை நியமிக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கி வீடுகள் கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் சம்பந்தம், கிளை செயலாளர்கள் நாகப்பன், ராஜா மற்றும் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்