அறத்தையும், வீரத்தையும் போற்றுவது தமிழ் சமூகம்
அறத்தையும், வீரத்தையும் போற்றுகின்ற சமூகம் தமிழ் சமூகம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
அறத்தையும், வீரத்தையும் போற்றுகின்ற சமூகம் தமிழ் சமூகம் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
சொற்பொழிவு
தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி தனியார் கல்லூரியில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் 'தலைநிமிர்ந்த தமிழக கிராமங்கள்' என்ற தலைப்பிலும், ஊடகவியலாளர் செந்தில்வேல் 'தமிழர் மரபும், நாகரிகமும்' என்ற தலைப்பிலும் பேசினர்.
மாபெரும் தமிழர் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை குறித்த காணொளி மற்றும் ராஜேந்திர சோழன் பெருமை குறித்த காணொளி மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பேசியதாவது:-
தமிழ் மரபு மற்றும் பண்பாடு என்னவென்றால், மரபுசார்ந்து ஒரு விஷயங்களை யாருக்கும் எங்கும் சொல்லிக் கொடுக்காமல் தொடர்ந்து நாம் கடைபிடித்து வருவது மரபு.
பண்பாடு என்ற கூறு நாகரிகத்தில் இருந்து வேறுபட்டிருக்கும் பண்பாடு என்பது உள்ளார்ந்து பேசக்கூடியது, நாகரிகம் என்பது பொருள் சார்ந்து வெளிப்படையாக தெரியக் கூடியதாக இருக்கும். தமிழ் மரபு பண்பாட்டை பரப்புவதற்காக இந்த சொற்பொழிவு நிகழ்த்தப்படுகின்றது.
அறத்தையும், வீரத்தையும்...
பண்பாடு என்றால் ஏதோ ஒரு அகம் சார்ந்த ஒரு மைய புள்ளியை வைத்து இந்த சமூகம் இயங்க வேண்டும். எதை வைத்து இந்த சமூகம் இயங்குகின்றது. தமிழ் சமூகம் உலகிற்கு என்ன பறைசாற்றுகின்றது என்று ஆய்ந்து அறிவோம்.
அறத்தையும், வீரத்தையும் போற்றுகின்ற சமூகம் நம் தமிழ் சமூகம். உலக இலக்கியங்களில் அறத்திற்கு முதன்மை கொடுத்த சமூகம் நம் தமிழ் சமூகம். ஜல்லிக்கட்டு இன்று வரை நமது வீரத்தை பறைசாற்றுகின்றது. அத்தகைய ஒரு பண்பாட்டு சமூகத்தை விழுமியங்களை அடுத்து தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
மீண்டும் தமிழராக பிறப்போமா என்பது தெரியாது. ஆனால் பிறந்து இருக்கின்ற ஒரு பிறப்பினை தமிழை ஏற்று பிடிக்க வேண்டும். தமிழ் பண்பாட்டை பாதுகாத்து உலகமெங்கும் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம், கந்திலி அரசு கல்லூரி முதல்வர் சீனுவாசகுமரன், தமிழ் இணைய கல்வி கழக பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.