தமிழ் சங்க கூட்டம்

மயிலாடுதுறை தமிழ் சங்கத்தின் சார்பில் உலகத்தாய்மொழி நாளையொட்டி சிறப்பு கூட்டம் நடந்தது.

Update: 2023-02-24 18:45 GMT


மயிலாடுதுறை தமிழ் சங்கத்தின் சார்பில் உலகத்தாய்மொழி நாளையொட்டி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் சிவலிங்கம், மயிலாடுதுறை உலக தமிழ் கழக தலைவர் சிவ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்சங்க நிர்வாகி விமலா நாகேஷ் வரவேற்றார். கூட்டத்தில் மொழிப்போர் வரலாற்றை முறையாக தொகுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும். மயிலாடுதுறையில் தமிழ்ப்பூங்கா அமைத்து, அதில் தமிழ் மொழி போராட்ட தியாகிகளுக்கு நினைவுத்தூண் அமைப்பதுடன் கம்பர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா., கோபாலகிருஷ்ண பாரதியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கல்கி.கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட அறிஞர்களுக்கு வரலாற்று குறிப்புகளுடன் சிலைகள் அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கச்சேரி சாலைக்கு 'தமிழ்ச்சாலை" என பெயர் சூட்டுவதுடன், நான்கு புறங்களிலும் உள்ள சாலைகளுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்