சமரசமின்றி நடவடிக்கை எடுங்கள்: "தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?..."என அண்ணாமலை அறிக்கை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2022-10-30 10:15 GMT

சென்னை,

தமிழக போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி விவரங்களுக்கு, அதேபோல புள்ளி விவரங்கள் கொண்ட மறுப்பு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை கூறியிருந்த நிலையில்,

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

நேற்று தமிழக காவல்துறை தலைமையகத்திலிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. இது இந்நாள் தமிழக காவல்துறை டிஜிபியாகிய திரு சைலேந்திர பாபு அவர்களின் ஒப்புதலோடு தான் வெளியிட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு ஒரு முன்னாள் இந்திய காவல் பணி அதிகாரியாகவும் இந்நாள் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும் பதிலளிக்க கடமைபட்டுள்ளேன்.

தமிழக காவல்துறை டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறையில் இருக்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கிய அறிக்கையின் கீழ்க்காணும் பகுதிகளை இதுவரை கண்டிருக்கமாட்டார் என்பதை அவர் வழங்கிய பத்திரிக்கை செய்தி தெளிவுபடுத்திவிட்டது. இந்த பகுதிகளின் விளக்கங்கள் இந்த அறிக்கையில் உள்ளது.

நான் பல கருத்துக்கள் கூறி விசாரணையின் போக்கை திசை திருப்ப முயற்சிப்பதாக தொடங்குகிறது காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம். அதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்களே, நீங்கள் ஒரு காவல் அதிகாரி தானே தவிர தங்களை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துக்கள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நான் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு:

1.23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது 23ஆம் தேதி மதியம் இதை பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மற்றும் இந்த வெடி விபத்தில்" இருக்கும் மர்மத்தை காவல்துறை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

2. 23ஆம் தேதி இரவு, நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை, இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?

3. சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பின்னரும் காவல்துறையிடமிருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ எவ்வித தகவலும் வராததால், 24ஆம் தேதி இரவு, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 36 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதை பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன்.

இதுவரை தமிழக முதல்-அமைச்சர் மவுனம் காப்பது அனைவரும் அறிந்ததே இந்த துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?

தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மென்ன நிலையில்இருப்பதால், ஒரு ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக பத்திரிகையாளர்வாயிலாக சில கேள்விகளை முன் வைத்தோம். அந்த

கேள்விகள் பின்வருமாறு * தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டிருக்கிறோம். என்று சொல்லும் காவல்துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்?.இது வரை இது ஒரு தீவிரவாத சதி செயல் என்று சொல்ல மறுப்பது என்?

(இதில் விசித்திரம் என்னவென்றால் நேற்று நீங்கள் கொடுத்த பத்திரிகை செய்தியில் கூட நடந்தது. தற்கொலைப்படை தாக்குதல் என்றோ தீவிரவாத சதிச்செயல் என்றோ குறிப்பிடப்படவில்லை. இப்போது தான் சிலிண்டர் வெடிப்பிலிருந்து குண்டு வெடிப்புக்கு தமிழக காவல்துறை முன்னேறியுள்ளது இதை தீவிரவாத நாக்குதல் என்றோ தற்கொலைப் படை தாக்குதல் என்றோ குறிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.! -

* அக்டோபர் 21ஆம் தேதி ஜமேஷா முபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா?

இறந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும். 1813 தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா?

* கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டம் பாயாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.

எதிர்க்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பலியான வழக்குகளுக்கு கூட வழக்கு பிரிவுகளுடன் கோபாலபுர குடும்ப தொலைக்காட்சிகளின் மூலமாக செய்திகள் வெளியிடும் நீங்கள். ஒரு தீவிரவாத சம்பவத்தில் கைதான 5 நபர்கள் மீது எந்த வழக்கு பிரிவின் கீழ கைதாகியுள்ளார்கள் என்பதனை குறிப்பிடாமல் பத்திரிகை செய்தி வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினோம்.

(இந்த கேள்வி எழுப்பி சரியாக 3 மணி நேரத்திற்கு பின்பு, கோவை மாவட்ட ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து, புவன் விசாரணையில் பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு உபா சட்டம் போடப்பட்டதாக கூறினார். இதிலிருந்து தெரியவில்லையா தங்கள் தலைமையிலான காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று)

தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகள் பற்றியும் ஒருசாராரை மட்டும் அரவணைத்து செயல்படும். உளவுத்துறையின் நோக்கத்தை பற்றியும் கேள்வி எழுப்பினேன்.

ஈரோடு மற்றும் சேலத்தில், பாரிஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் போல் நடத்திட திட்டம் தீட்டியர்வர்களை கமுக்கமாக கைது செய்து இதைப் பற்றி செய்திகள் வெளியிடாத அரசின் உள்நோக்கத்தை கேள்வி எழுப்பினேன்.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த அன்று தமிழக டிஜிபி கொடுத்த நேர்காணல் இது ஏதோ சாதாரண விபத்து

போன்ற தோற்றத்தை கொடுத்தமைக்கு எங்கள் கண்டனத்தை பதிவு 15 மாதங்களாக தேசிய புலனாய்வு முகமையின் காவல் செய்தோம். நிலையத்திற்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது ஏன் என்ற கேள்வியை தமிழக அரசுக்கு முன்வைத்தோம்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை தற்கொவைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசை திருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல்துறை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

526ஆம் தேதி இந்த வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதை வரவேற்று மீண்டும். இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சில ஆலோசனைகளை அரசுக்கு முன் வைத்தோம். திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையின்னர பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்பதும் நாங்கள் கொடுத்த ஆலோசனையில் ஒன்று

6. அக்டோபர் 27ஆம் தேதி, மத்திய உளவுத்துறை கொடுத்த குறிப்பிட்ட எச்சரிக்கைக்கு பின்னரும் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது ஏன் என்றும் தீவிரவாத சதிச்செயலில் ஈடுபட்ட முபினை கண்காணிக்க கொடுக்கப்பட்ட எச்சரிக்கையை காவல்துறை பின்பற்றாதது ஏன் என்பதையும் கேட்டிருந்தோம்

18ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கிய பொதுவான சுற்றறிக்கை என்றும் இதில் கோவை தாக்குதல் பற்றி குறிப்பிட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை நேற்று பத்திரிகை செய்தி வாயிலாக தமிழக காவல்துறை தலைமை முன்வைத்துள்ளது மேலும் 18ஆம் தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21ஆம் தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர் இது ஒரு பொய் 21ஆம் தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல்துறைக்கு வந்துவிட்டது. என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

மேலும், குறிப்பிட்ட எச்சரிக்கை என்பது அறிவாலய இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்கும் திரைப்படத்திற்கு எழுதப்படும். திரைக்கதை அல்ல மற்றும் இது பொதுவாக வழங்கப்பட்ட சுற்றறிக்கையும் அல்ல

கர்நாடகா, கேரலா மற்றும் தமிழகத்தில் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை காவல்துறை மறுக்குமா?

21ஆம் தேதி அனைத்து காவல் ஆணையர்களுக்கும் காவல்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பகிரப்பட்ட இந்த அறிக்கையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிட கூடாது என்பதை சுட்டிக்காட்டி போதிய நடவடிக்கைகளை

எடுங்கள் என்று குறிப்பிட்டதை மறுப்பீர்களா?

மத்திய அரசின் ஆவணம் திமுக செய்தி தொடர்பாளருக்கு எப்படி போனது. இதை காவல்துறை தலைமை அவருக்கு வழங்கியதா அல்லது அரசு அதிகாரிகள் வழங்கினார்களா?

இதுபோன்ற நடவடிக்கைகள் நான் நடந்த தீவிரவாத தாக்குதலை திசை திருப்பும் முயற்சி இதற்கு நீங்கள் என்ன எடுக்கப்போகிறீர்கள் நடவடிக்கை என்று பொறுத்திருந்து பார்ப்போம்,

அக்டோபர் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னரே ஜமேஷா முபீன் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறைக்கு காவல்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது.

945 நபர்களுக்கு ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு அதில் ஜமேஷா முபீன் ஆம் இடத்தில் உள்ளார்.

2 23ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறை தனிப்பிரிவு கொடுத்த அறிக்கையின்படி நடைபெற்றது தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவிக்காமல் மெளனமாக இருப்பதன் காரணம் என்ன?

3. தமிழக கவர்னர் இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர் என்பது போன்று சமூக வலைதளங்களில் பரப்பி வரும் திமுகவினர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? வழக்கின் போக்கை ஆளும் கட்சியினர் திசைதிருப்பும் முயற்சியாக மேற்கொள்ளப்படும். பொய் பரப்புரைகளை கண்டும். காணாமல் இருப்பது ஏன்?

நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்ததை தங்களது எனது பத்திரிகை செய்தியில் கட்டிக்காட்டி இருந்தீர்கள். நான் கர்நாடகத்தில் காவல் அதிகாரியாக இருந்தபோது நடவடிக்கைகளை நீங்கள் இன்று ஒரு தனிப்படை அமைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். தமிழனின் பெருமையை கர்நாடகாவில் நிலைநாட்டி விட்டு வந்திருக்கிறேன் மீண்டும் காக்கி அணிய எண்ணம் இல்லை, ஒரு காலத்தில் காக்கி அணிந்தவன் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை

இந்த வருடம் செப்டம்பர் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்திற்கான உளவுத்துறை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு தான் அவசர அவசரமாக இந்த பணியிடம் திரப்பப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது இது தான் தமிழகத்தில் உளவுத்துறை செயல்படும் லட்சணம்.

1998ஆம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் தமிழக உளவுத்துறையின் மெத்தன போக்கே சென்ற வாரம் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணம் உளவுத்துறை ஏடிஜிபி திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களும் டிஜிபி திரு சைலேந்திர பாபு அவர்களும் தான் மிதிவண்டி ஓட்டுவதில் காட்டும் ஆர்வத்தை தன் பணியில் காட்டியிருந்தால் இது போன்ற நிகழ்ந்திருக்காது சம்பவங்கள் விசாரணையின் போக்கை திசைதிருப்புதல் என்று பத்திரிகை செய்தியில் குறிப்பிட்ட டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

பெரோஸ் இஸ்மாயில் என்பவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 1515 தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருந்ததால் இவர் ஐக்கிய அரபு நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார் அதன் பின் இவர் கோவையில் தங்கியிருந்தார் இவர் தமிழக உளவுத்துறை அல்லது கோவை காவல்துறையினரின் - கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பியது எப்படி?

இதற்கு முன் திண்டுக்கல் எஸ்பியாக நீங்கள் செய்த 'சாதனைகள்' காஞ்சிபுரம் டிஐஜியாக செய்த சாதனைகளை மக்கள் மறத்திருக்கலாம். நான் மறக்கவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்திடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளதே என்பதில் வருத்தமே வாழ்க கலைஞர். வாழ்க தளபதி வாழ்க இளவரசர் உதயநிதி போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக உங்களிடம் முன்வைக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்