தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-17 16:44 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதை கண்டிப்பது, தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி பொய் வழக்கு போடுவதை கண்டிப்பது, தேனி புதிய பஸ் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா போன்றவை விற்பனை நடப்பதை தடுக்க வேண்டும், தேனி புதிய பஸ் நிலைய மேற்கூரை சேதம் அடைந்தும் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் சங்கிலி கலந்துகொண்டு பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஆனந்த், மாவட்ட பொதுச்செயலாளர் குமரேசன், மாவட்ட தலைவர் பரத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பேசினர். பின்னர் அவர்கள் இதுதொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்