தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் பொறுப்பேற்பு
தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச்செயலாளர் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில பொதுச்செயலாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த வேலுமனோகரன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் வேலுமனோகரன் தேர்வு செய்யப்பட்டு பதவி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ராமநாதபுரம் தாலுகா யாதவர் சங்கம் மற்றும் யாதவ வர்த்தகர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா யாதவ சங்க மகாலில் நடைபெற்றது. விழாவுக்கு தாலுகா யாதவ சங்க தலைவர் மணிமாதவன் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பண்டியன் முன்னிலை வகித்தார். யாதவ வர்த்தகர்கள் சங்க தலைவர் பாலமுருகன் வரவேற்றார். விழாவில் மாநில பொதுச்செயலாளர் வேலுமனோகரனை பாராட்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநில தலைவர் ந.சே.ராமசந்திரன் ஒப்புதலுடன் ராமநாதபுரம் மாவட்ட யாதவ மகாசபை தலைவராக புத்தேந்தல் குரு பிரகலாதன், செயலாளராக முதுகுளத்தூர் கருப்பசாமி, பொருளாளராக பரமக்குடி கனகராஜ் ஆகியோரை தேர்வு செய்வதற்கு அறிமுகம் செய்யப்பட்டனர். விழாவில் வக்கீல் எஸ்.கே.கணேசன், முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், தாலுகா யாதவ சங்க தலைவர்கள் பரமக்குடி ராமு யாதவ், முதுகுளத்தூர் ராமு, பரமக்குடி யூனியன் தலைவர் சிந்தாமணி முத்தையா, மாவட்ட கவுன்சிலர்கள் பட்டணம்காத்தான் கவிதா கதிரேசன், காஞ்சிரங்குடி ஆதித்தன், தொழிலதிபர்கள் ஜெ.எஸ்.லோகிதாசன், கனகராஜ், கே.ஓ.ஆர்.செந்தாமரை கண்ணன், ராமேசுவரம் தீவு யாதவர் சங்க தலைவர் தில்லைமுத்து, பரமக்குடி சண்முகராஜ், பி.என்.சந்திரன், சாயல்குடி முத்துசெல்வம், வக்கீல்கள் முனியசாமி, அழகுபால கிருஷ்ணன், அன்புசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். யாதவ வர்த்தக சங்க செயலாளர் ஜெயக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாலுகா யாதவ சங்க செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.