ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள தேர்வுகளை மாற்ற வேண்டும்-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள தேர்வுகளை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-04-14 18:45 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்ட தலைவர் சாகுல், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் பல சமூகத்தை சார்ந்த, பல கொள்கை சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இது மதச்சார்பற்ற நாடாகும். அனைவருடைய கொள்கையையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சாசன சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய இரண்டு பெருநாட்களுக்கும் அரசு விடுமுறை வழங்குகிறது. ஒன்று ரமலான் பண்டிகை, மற்றொன்று பக்ரீத் பண்டிகை.

பள்ளிக் கல்வித்துறை சார்பாக தற்போது 6, முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி தேர்வு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய சூழல் உள்ளது. ரமலான் பண்டிகை பிறை தென்படுவதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி வருகிற 21-ந் தேதி அல்லது 22-ந் தேதி ரமலான் பண்டிகை வர உள்ளது. பண்டிகை நாளில் தேர்வு இருப்பதால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். எனவே, அந்த குறிப்பிட்ட நாட்களில் தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்