தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும், ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் உ.பி. அரசையும், துப்பாக்கி சூடு நடத்தி 2 அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை படுகொலை செய்த ஜார்கண்ட் அரசை கண்டித்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகம்மது இலியாஸ், பொருளாளர் அப்துல்ஹை, துணை செயலாளர்கள் அப்துல்லத்தீப், அகமதுஷெரீப், தாரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நெல்லை செய்யதுஅலி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் எம்.இப்ராஹிம் நன்றி கூறினார்.