தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-09 14:10 GMT

அச்சன்புதூர்:

நபிகள் நாயகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்காசி மாவட்டம் சார்பாக கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்துல் நாசர், மாநில செயலாளர் முகம்மது ஒலி, மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட பொருளாளர் ஜலாலுதீன், துணைத்தலைவர் மசூது சாகிப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் பாரூக் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், வடகரை, அச்சன்புதூர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்