தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-07 20:37 GMT

நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேதாஜி சாலை தோண்டப்பட்டு சீரமைக்கப்படாமல் கிடப்பதால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலப்பாளையத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும். சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும். குப்பைகள், கழிவுகள், சாக்கடைகளை உரிய நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.ஏ.செய்யது அலி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நிர்வாகிகள், ஏராமளான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்