தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.

Update: 2022-11-21 16:02 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சிறுவிடுப்பு, வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பா.வேலு தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெபஸ்டின், மாவட்ட துணை தலைவர் மேகநாதன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பெருமாள் வரவேற்றார்.

மாநில தணிக்கையாளர் சரவணன், கல்வித்துறை மாநில தலைவர் சேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின, இரவு நேர, வாட்ஸ்அப், காணொலி ஆய்வுகளைக் கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு. ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், பணிவரன்முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டமும், டிசம்பர் மாதம் 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடுவது பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வட்ட கிளைச் செயலாளர் சங்கீதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்