தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-30 17:52 GMT

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜா, தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துணைத்தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்து பேசினார். உதவி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி செயற்பொறியாளர் நிலையிலான பதவி உயர்வு ஆணைகளை வெளியிடுதல், ஊராட்சி செயலர்கள் நிலைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை உடனே நிரப்புதல் மற்றும் வளர்ச்சித்துறையின் அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊராட்சி செயலர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளான தேர்வுநிலை, சிறப்புநிலை ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ரமேஷ், சசிகுமார் மாலதி உள்பட பலர் பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்