தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-04-30 19:34 GMT

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குஜிலியம்பாறை வீரப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளை ஒரு மனதாக தேர்வு செய்ய உறுதி செய்யப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டம் பொசியம்பட்டியை சேர்ந்த பி.எம். மாணிக்கம் மாநிலத்தலைவராகவும், மாநில பொதுச்செயலாளராக சேலம் மாவட்டம் நாகியம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து விராலிப்பட்டி தங்கவேல், மோத்தம்பட்டி துரை ஆகியோர் மாநில துணைத்தலைவர்களாகவும், மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக சுக்காம்பட்டி நோஞ்சான், வேடசந்தூர் ரெங்கசாமி, ஆவடி நல்லுசாமி, மாநில பொருளாளராக வான்ராயன்பட்டி பழனிச்சாமி, மாநில இளைஞர் அணி தலைவராக மணப்பாறை ராதா, மாநில இளைஞரணி துணைத்தலைவர்களாக பில்லூர் மு.தமிழழகன், குன்னாகவுண்டன்பட்டி கோபால், வேலாண்டிபாளையம் வெங்கடாசலம், வரவனை சுரேஷ், மாநில விவசாய அணி தலைவராக செம்ம்பாறைப்பட்டி ராமர், மாநில வழக்கறிஞர் அணி தலைவராக கழுத்தறிக்கப்பட்டி கருப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஊராளி கவுண்டர் சங்க பிரதிநிதிகள் மற்றும் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்