தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்னிலம்:
கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மனோஜ் மணியன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்யாததால் நாள்முழுவதும் பணியை புறக்கணித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தின் உள்ளே வட்ட கிளை தலைவர் தணிகாசலம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் வட்ட செயலாளர் பக்கிரிசாமி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருணாமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.