மின்கட்டண உயர்வு தடைக்கு எதிராக தமிழக மின்வாரியம் மேல்முறையீடு

மின்கட்டண உயர்வு தடைக்கு எதிராக தமிழக மின்வாரியம் மேல்முறையீடு: மதுரை ஐகோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை.

Update: 2022-08-30 20:43 GMT

மதுரை,

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை, மின்கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மின்வாரியம் சார்பிலும், எதிர்தரப்பினர் சார்பிலும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு (அதாவது நாளைக்கு) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்