தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
பணி விதிகள் அரசாணை வெளியிடக்கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது
திருவாரூர்:
பணி விதிகள் குறித்த அரசாணை வெளியிடக்கோரி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் துணைத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.தமிழகத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கான பணி ஆணை தற்போது வரை வழங்கப்படவில்லை. அதனை வழங்க வலியுறுத்தி வருகிற 15-ம் தேதி சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடக்க உள்ளது. அதற்கு ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயல் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.