கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்சு நிறுவனத்துடன்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வணிக ஒப்பந்தம்

கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்சு நிறுவனத்துடன்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

Update: 2022-12-15 18:45 GMT

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்சு நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட், தலைசிறந்த தனியார் துறை வங்கி ஆகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவை புரிந்து வருகிறது. தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

இந்த வங்கி, தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி ஆகும். தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னிறுத்தி வங்கி அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது.

ஒப்பந்தம்

இந்தநிலையில், கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்சு நிறுவனத்துடன் புதிதாக வணிக ஒப்பந்தம் செய்து உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன், கோடக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்சு நிறுவன அதிகாரியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இதுகுறித்து எஸ்.கிருஷ்ணன் கூறும்போது, 'பங்குசந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கி நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகமாக செயல்பட்டு வருகிறது. அதே போன்று பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளிலும் பல்வேறு அம்சங்களை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வணிக ஒப்பந்தம் ஒரு மகத்தான நிகழ்வு ஆகும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்